Kattankudy News

Kattankudy News இலங்கை மற்றும் காத்தான்குடியின் முக?

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று (14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ...
14/01/2022

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று (14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஜகார்த்தாவிலிருந்து 110 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Join Our WhatsApp Group 👇🏼🪀

எமது WhatsApp குழுவில் இன்றே இணைய 👇🏼🪀

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

08/12/2021
20/09/2021
07/08/2021

*5,000 பேர் கொரோனாவுக்கு பலி*

நேற்றைய தினம் (06) நாட்டில் மேலும் 98 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,017 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 327,019 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,794 ஆக அதிகரித்துள்ளது.

01/08/2021

*6 வருடங்களின் பின்னர்ரஷ்யாவிற்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்*

6 வருடங்களின் பின்னர் ஶ்ரீலங்கன் விமான சேவையினால் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நேரடி விமான சேவைகள் இன்று (01) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ரஷ்யாவின் மெஸ்கோவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த UL 534 என்ற விமானம் இன்று காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் 51 பேர் குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தொடர்ந்து விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

12/07/2021

💥 *SCHOOLS REOPEN*
*ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்*

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும் நாளையும் தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்த போராட்டத்தில் இடம்பெற்ற கைது நடவடிக்கை காரணமாக ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர் என்றும் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், சில ஆசிரியர்கள் மட்டுமே இன்று கற்பிப்பிலிருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் இருப்பினும், ஒன்லைன் கல்வியைத் தொடர வேண்டும் என்றாலும் அது நிரந்தர தீர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

10/07/2021

*இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை 21 ஜூலை, புதன் கிழமை கொண்டாடுவார்கள் என அறிவிப்பு*

துல் ஹஜ் மாதத்திற்கான தலை பிறை இன்று 10.07.2021, தென்படாததனால் இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை 21 ஜூலை 2021, புதன் கிழமை கொண்டாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

05/07/2021

*ஃபைஸர் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டை வந்தடைந்தன*

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஃபைசர் கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று (05) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளன.

இலங்கை கொள்வனவு செய்துள்ள 2 இலட்சம் தடுப்புசி டோஸ்களின் முதல் தொகுதியாக 26,000 ஃபைஸர் தடுப்பூசி டோஸ்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபைசர் தடுப்பூசியை தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நாடு பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

02/07/2021

*🚨BREAKING NEWS🚨*
*தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை இம்மாதம் ஆரம்பிக்க தீர்மானம்*

100 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதாரத் பிரிவின் முழு பரிந்துரைகளுக்கு இணங்க ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக முதலில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது கட்டாயமாகும் என ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டினுள் 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1,439 பாடசாலைகளும், 51-100 மாணவர்களை கொண்ட 1,523 பாடசாலைகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் குறித்த பாடசாலைகளை ஆரம்பித்து பின்னர் ஏனைய பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

*கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்*  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்...
30/06/2021

*கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்*

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

WhatsApp Group Invite

30/06/2021

*முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படும் வெடிபொருட்கள்*

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறது.

அந்த வகையில் நேற்றைய முன்தினம் (28) முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் லதனி சிறுவர் இல்லத்துக்கு அருகில் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, முல்லைத்தீவு நகர் பகுதியில் சுனாமி நினைவாலயதிற்கு அருகிலும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (29) முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடற்படையினரால் வெடிபொருடக்ள் சில மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு குண்டுகள், ஒரு கிழைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

போரின் போது பாவிக்கப்பட்ட குறித்த வெடிபொருட்கள் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ளன.

குறித்து வெடிபொருட்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களை தகர்த்து அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

30/06/2021

*20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவக்கை*

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுனாமி கடல்பேரலை மற்றும் தற்போதைய கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் இந்த தொலைகாட்சி அலைவரிசை ஊடான மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாடசாலைகளைப் போன்று காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா என்றும் சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

30/06/2021

*2,697,778 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டது*

நாட்டில் இதுவரை 2,697,778 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (29) மாத்திரம் 61,255 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 43,999 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 375,784 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 114,795 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*L.M.S முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்* ஈ - தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) ...
25/06/2021

*L.M.S முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்*

ஈ - தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது.

உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில் ஆரம்பமாகி, எதிர்காலத்தில் 200 பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

ஒன்லைன் முறையின் கீழ் கிராமப்புற பாடசாலைகளின் மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அத்துடன், வீடியோ (காணொளி) தொழில்நுட்பத்தின் கீழ் ஒன்லைன் கல்வியை இலவசமாக வழங்கும் திட்டமும் ஈ - தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Invite

Address

Razeedlane
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kattankudy News:

Share

Category